“நான் அதிகம் பேசமாட்டேன்;செயலில் செய்து காட்டுவேன்” – முதல்வர் ஸ்டாலின்!

Default Image

கோவை:’பேச்சை குறைத்து செயலில் உனது திறமையை காட்டு’ என்ற பழமொழிகேற்ப,நிச்சயமாக தமிழகத்திலேயே தலைசிறந்த மாவட்டமாக கோவை இருப்பதற்கு பணியாற்ற தொடங்கி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,2 நாள் பயணமாக கோவை மற்றும் திருப்பூருக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில், கோவையில், வ.உ.சி மைதானத்தில் தற்போது நடைபெறும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில், ரூ.441.76 கோடி மதிப்பில், 23,534 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.ரூ.596 கோடி மதிப்பில் 67 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.89.73 கோடி செலவில் முடிக்கப்பட்ட திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில்,விழாவில் திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது:

“சட்டமன்ற தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் பெருவாரியான வெற்றி கிடைத்தது.சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெற முடியவில்லை.எனினும்,நான் ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும் பணியாற்றுவதில்லை.ஓட்டு போடாதவர்களுக்கும் பணியாற்றுகிறேன்.அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள் தான் என்ற வகையில் பணியாற்றுகிறேன்.அப்படிதான் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் அவர்கள் எங்களை வளர்த்திருக்கிறார்கள்.

தேர்தலுக்கு முன்னர் மக்களிடம் வாங்கிய மனுக்களுக்கு நான் தீர்வு கண்டு வருகிறேன்.இதற்கிடையில்,என்னால் பெட்டியை திறக்க முடியாது என்று சிலர் கூறினார்கள்.ஆனால்,தற்போது மனுக்களுக்கு நான் தீர்வு கண்டு வருவதை மக்கள் பெருமையாக பேசுகிறார்கள்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் மாவட்டமாக கோவை விளங்குகிறது.தொழில் வளர்ச்சி நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும். கோவை முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. இது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும்.மேலும்,கோவை மாவட்ட வளர்ச்சிக்காக நான் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை நியமித்துள்ளேன். அதேபோன்று,கோவை விமான நிலைய திட்டத்துக்கு ரூ.1132 கோடியை அரசு ஒதுக்கிய நிலையில்,பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட சின்னவேடம்பட்டி, வெள்ளகிணறு ஆகிய பகுதிகளில் ரூ.332 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்படும்.கோவையில் மத்தியில் உள்ள சிறை,நகருக்கு வெளியே மாற்றப்படும்.மாவட்ட மக்களின் கூடுதல் மருத்துவ வசதிக்காக ரூ.16 கோடி செலவில் நலவாழ்வு மையங்கள் துவங்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்”,என்று கூறினார்.

மேலும்,”நிதி எதற்காக ஒதுக்கப்பட்டது என்பதற்காகவே இவ்வளவு விவரங்களை கூறினேன்.நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன்.செயலில் எனது பணி இருக்கும்.ஏனெனில்,பேச்சை குறைத்து செயலில் உனது திறமையை காட்டு என்ற பழமொழி உள்ளது.அதற்கேற்ப,நிச்சயமாக தமிழகத்திலேயே தலைசிறந்த மாவட்டமாக கோவை இருப்பதற்கு நாங்கள் பணியாற்ற தொடங்கி விட்டோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்