பிழை செய்யமாட்டேன், வரலாற்று சரித்திரம் படைப்பேன் – தமிழிசை பதிலடி
பிழை செய்யமாட்டேன், வரலாற்று சரித்திரம் படைப்பேன் என பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு உட்பட்ட கரைகளுக்கு இன்று சென்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அணி வகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதை ஏற்ற தமிழிசை முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் மருத்துவமனையை ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லோரும் தங்களது முறை வரும்போது, கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு கொடுப்பது, அவர்கள் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினார்கள், ஆதலால், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தடுப்பூசி கொடுக்கப்படுகிறது என்று தெளிவுபடுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழிசை வரலாற்று பிழை செய்திருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றசாட்டியது குறித்த கேள்விக்கு, பிழை செய்யமாட்டேன், வரலாற்று சரித்திரம் படைப்பேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழிசை புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களை பாஜக எம்எல்ஏக்கள் என கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.