இனி நான் செல்லமாட்டேன்., எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம் என கூறி கேஎஸ் அழகிரி கண்ணீர்.!
திமுகவுடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கேஎஸ் அழகிரி கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கடந்த மூன்று நாட்களுக்கு மேல் மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்றும் தொடர் இழுபறியில் உள்ளது எனவும் தகவல் வெளியாகியிருந்தது. காங்கிரஸ் தரப்பில் குறைந்தது 27 தொகுதிகளாவது ஒதிக்கீடு செய்ய வேண்டும் என கூறி வந்த நிலையில், 22 தான் ஒதுக்க முடியும் என திமுக பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அடுத்து என்ன செய்து என்று கலந்தாலோசிக்க இன்று காலை காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேசும்போது, கடந்த 15 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து போட்டியிட தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
ஏற்கனவே நாம் திமுகவுடன் கூட்டணி பேரம் பேசமாட்டோம், ஆனால் தமிழகத்தில் 100 தொகுதிகளில் திமுக வெற்றிக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கிறது. எனவே, சட்டப்பேரவையில் கவுரவமான முறையில் திமுக தொகுதி பங்கீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம் என கூறியவாறு கண்கலங்கியுள்ளார்.
இதையடுத்து பேசிய கேஎஸ் அழகிரி, இனிமேல் நான் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு செல்லமாட்டேன், நீங்களே சென்று எண்ணிக்கையை முடிவு செய்யுங்கள், அதன்பிறகு நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருகிறேன் என கண்ணீர் மல்க பேசியுள்ளதாக கூறப்படுகிறது.