தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி தமிழ் என்பது மொழி, கலாச்சாரம், வரலாறு கொண்டது என கூறியுள்ளார்.
திருப்பூர் தாராபுரத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ் என்பது மொழி, கலாச்சாரம், வரலாறு கொண்டது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என பாஜக சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அது நாட்டின் அடித்தளம் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.
வேற்றுமையில் ஒற்றுமை, கலாச்சாரங்கள் மீதான மரியாதை நாட்டின் அடித்தளம். தமிழ் கலாச்சாரத்தை பிரதமர் மோடி அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். பாஜக மாற்று ஆர்எஸ்எஸ் ஒரே மொழி, ஒரே மதம் ஒரே நாடு என்று கூறிக்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகளின் முதுகெலும்பை உடைத்தார் பிரதமர் மோடி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான தொழில்கள் அழிந்தே போயின.
பிரதமர் மோடி நெருக்கமான 5 தொழிலதிபர்களுக்காகவே ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தினார். மேற்கு வங்கத்தில் பேசுவது தனி மொழி இல்லையா? மே.வங்கத்துக்கு வரலாறு இல்லையா? என்றும் பஞ்சாபி மொழியை மக்கள் பேசவில்லையா? வடகிழக்கில் தனிமொழிகள் இல்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழகத்து இளைஞர்கள் மட்டுமே முடிவு செய்வார்கள். தமிழ் மக்களுடன் எனக்கு இருப்பது குடும்ப உறவு, ரத்த உறவாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…