விவசாயிகளைத் திரட்டி போராட்டத்தை நடத்துவேன் – சீமான்
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம், உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி, அண்டமி, நெம்மேரி, கொடியாளம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் டெஹ்ரிவித்துள்ளார்.
போராட்டம் நடத்துவேன்
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘ தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்கமாட்டேன். நிலக்கரி எடுப்பதற்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவேன் என தெரிவித்துள்ளார்.