வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனை சந்திப்பேன் – ஓ.பி.எஸ்
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் டிடிவி தினகரனை சந்திப்பேன் என்று ஓபிஎஸ் பேட்டி.
சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ஆதரவாளர்களைசந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுக்குழு விரைவில் நடைபெறும் நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசவில்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் டிடிவி தினகரனை சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ்-ஐ சந்திக்க தயாராக உள்ளேன் என தெரிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ் இவ்வாறு பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.