திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன் – அண்ணாமலை
நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்.
சர்வேதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 4 நாள் அரசுமுறை துபாய் பயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்திருந்தார். திமுகவின் ஆர்எஸ் பாரதி கூறுகையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணத்தை, சொந்த பணத்தை முதலீடு செய்ய சென்றிருப்பதாக அண்ணாமலை கூறுகிறார்.
முதலமைச்சரை விமர்சித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் எனவும் தெரிவித்த ஆர்எஸ் பாரதி, நோட்டீஸ் அனுப்பிய 24 மணிநேரத்திற்குள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்எஸ் பாரதி கண்டனம் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
அதில், 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது. மேலும், நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்… துணிவுடன். மக்கள் துணையுடன்.. என்றும் தெரிவித்துள்ளார்.
100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன்.
தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது.
1/2
— K.Annamalai (@annamalai_k) March 26, 2022