‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

தமிழ்நாட்டில் எங்கவேண்டுமானாலும் நாங்கள் கால் வைப்போம் என வைகோ பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

vaiko nirmala sitharaman

டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று வருகிறது. அப்படி தான் நேற்று நடைபெற்றபோது மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து பேசிய மதிமுக (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்) பொதுச்செயலாளர் வைகோவுக்கும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே நடந்த காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதம், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாதத்தின் போது, வைகோ “தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்” என்று எச்சரிக்கும் வகையில் கூறியிருந்தார். இதனை கேட்டவுடன் டென்ஷனான நிர்மலா சீதாராமன் உடனடியாக அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பேசினார்.

இது குறித்து அவர் பேசுகையில். “அப்படி பேசுவது தவறு. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உரிமை உள்ளது. நாங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்வோம், உங்களால் என்ன செய்ய முடியும்? இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நாடு என்பதை வலியுறுத்திய அவர், எந்த ஒரு மாநிலத்திற்கும் யாரும் செல்ல முடியாது என்று கூறுவது ஜனநாயகத்திற்கும், சபையின் மரியாதைக்கும் எதிரானது.

வைகோ எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவார். இந்த முறை அவர் பேசியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வைகோ பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” எனவும் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து வைகோவின் பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்