#BREAKING: சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் – கமல்ஹாசன்

சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் என்று மதுரையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன. அதிமுக – திமுக இடையே எப்போதும் வழக்கம்போல நேரடி போட்டி நிலவி வருகிறது. இதனிடையே, ரஜினியும் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார். அதில் மதுரையில் கமல்ஹாசன் தனது முதல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று மதுரையில் கமல் ஹாசன் பத்திரிக்கையாளர் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டி என்பதை பின்னர் அறிவிக்கப்படும். நேர்மையை வைத்து அரசியல் செய்வேன். கார்ப்ரேட் இருக்கக்கூடாது என்று சொல்வது மடமைத்தனமானது.
மேலும் அவர் கூறுகையில், ஊழலை மேல்மட்டத்தில் ஒழிக்க வேண்டும். ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்வேன். நாத்திகவாதி என்ற பட்டத்தை ஏற்றுக்கொள்வது கிடையாது. பகுத்தறிவுவாதி என்பதை ஏற்றுக்கொள்கிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.