23-ம் தேதி ஜப்பான் செல்கிறேன் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

CM MK STALIN

ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் 23-ஆம் தேதி செல்ல உள்ளேன் என முதலமைச்சர் அறிவிப்பு. 

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிசி எலக்ட்ரிக் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்று வரும் நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பின், இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2024 ஜனவரியில் நடைபெற உள்ள முதலீட்டாளர்களை மாநாட்டுக்கு வருமாறு உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு  விடுக்க உள்ளேன்.

முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு வரும் 23-ஆம் தேதி செல்ல உள்ளேன். ஏற்றுமதி மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில், தொழில்துறை நிகழ்ச்சிகள் தான் அதிகம் என தெரிவித்தார்.

மேலும், பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களை வரவேற்கிறோம்.தெற்காசியா அளவில் முதலீடுகளை ஈர்த்திட சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க பெரும் முயற்சி எடுத்து வருகிறோம். ஜப்பான் – தமிழ்நாடு உறவை மேம்படுத்த பயணம் மேற்கொள்ள உள்ளேன் எனவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு முதல்வர் இவ்வாறு கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்