கோவையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவை பாஜக முழுமையாக வரவேற்கிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம் என ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை பல நாடுகளில் அமலில் இருக்கிறது. இந்தோனேசியா, பெலிஜியம், தென் ஆப்பிரிக்கா உள்பட பல நாடுகளில் இருக்கிறது.
எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை பாஜக முழுமையாக வரவேற்கிறது. தேர்தல்கள் மாறி மாறி வருவதால் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடந்தால், தேர்தல் செலவு குறையும். இந்தியாவின் வளர்ச்சி அதிகப்படும். அதிகாரிகளுக்கு சுமை குறையும் என்றார். இதனைத்தொடர்ந்து சீமான் பேசியது தொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், சீமானை விட 1% அல்ல, 30% வாக்குகளை வாங்கி காட்டுவேன். சவாலுக்கு தயார் என்றார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை யாரும் சேர்த்து கொள்ளாததால் தேர்தலில் தனியாக நிற்கிறார்கள். எனவே, நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமான வாக்குகளை பாஜக பெறும். நாம் தமிழர் கட்சி 2024க்கு பின்னர் இருக்காது. வெறுப்பை விதைத்து கட்சி நடத்த முடியாது என தெரிவித்தார்.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…