கலைஞர் கருணாநிதியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் – வைகோ
கலைஞர் கருணாநிதியிடம் ஸ்டாலினுக்கு பக்கப்பலமாக இருப்பேன் என உறுதியளித்தேன். கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதியின் படி, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளேன்.
திமுக – மதிமுக தொகுதி பங்கீடு குறித்து இரண்டு கட்டம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்தது. இதனையடுத்து, இன்று மீண்டும் திமுக மதிமுகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது. அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் சற்று முன் திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
தனி சின்னத்தில் போட்டியிட்டால் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக திமுக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 6 தொகுதிகளை பெற்றுகொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தில் மதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ அவர்கள், ‘6 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். வாக்கு சேகரிப்பில் ஈடுபட குறைவான நாட்களே உள்ள நிலையில், உதயசூரியனில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம். கலைஞர் கருணாநிதியிடம் ஸ்டாலினுக்கு பக்கப்பலமாக இருப்பேன் என உறுதியளித்தேன். கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதியின் படி, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளேன். ஸ்டாலினை அனைத்து தகுதிகளையும் கொண்ட முதல்வர் வேட்பாளராக பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.