எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன் – எடப்பாடி பழனிசாமி
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன் என எடப்பாடி பழனிசாமி பேட்டி.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திய பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக தலைமை அலுவலகத்தில், மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். வெற்றிச் சான்றிதழ் பெற்றுக் கொண்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி. ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன்; எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன் என தெரிவித்துள்ளார்.