திருவாரூர், நாகையில் வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வேன் …! முதலமைச்சர் பழனிசாமி
திருவாரூர், நாகையில் வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதலமைச்சர் பழனிச்சாமி.புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களை மட்டும் ஆய்வு செய்து பாதியில் திரும்பினார்.மோசமான வானிலை காரணமாக முதலமைச்சர் பழனிச்சாமியின் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. புயல் பாதித்த நாகையை முதலமைச்சர் பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், அங்கு மழை பெய்து வருவதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மழையில் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்று பயணம் ரத்து செய்யப்பட்டது.இதனால் முதலமைச்சர் பழனிசாமி திருவாரூரிலிருந்து திருச்சிக்கு திரும்பி சென்றார்.
இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், கனமழை பெய்ததால் ஹெலிகாப்டரில் நாகை, திருவாரூர் செல்ல முடியாததால் திருச்சிக்கு திரும்பினேன். திருவாரூர், நாகையில் வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.