மிகவிரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் இன்று காலை பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு காரில் புறப்பட்டார். சசிகலாவிற்கு வரும் வழியில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கிருஷ்ணகிரி அருகே சசிகலா தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்,அடக்குமுறைக்கு என்றும் அடிபணிய மாட்டேன் .கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது. புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம்.நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன்.
மேலும் அவர் பேசுகையில் ,எம் ஜி ஆர் வழிவந்த ஓர்தாய் வயிற்று பிள்ளைகள், ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டும்.ஜெயலலிதா நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.மிகவிரைவில் உங்களை சந்திக்கிறேன்.சந்திக்கும்போது அனைத்தையும் கூறுகிறேன் என்று பேசியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…