சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
சமீப நாட்களாக, சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஆனந்தனுடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. தொண்டர்களுடன் மட்டுமே சசிகலா பேசுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஒருவருடன் சசிகலா பேசியிருக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜெயலலிதா 1991-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது, ஆனந்தன் அமைச்சராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆனந்தனுடன், சசிகலா அவர்கள் கூறுகையில், கட்சி நமது கண்ணெதிரே சீர்குலைந்து போவதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. எனவே தொண்டர்களுக்காக கட்சியை மீட்டெடுக்க நிச்சயம் வருவேன் என கூறியுள்ளார். ஏற்கனவே இதுபோல தொண்டர்களுடன் பேசும் வீடியோ வெளியாகி இருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் ஒருவருடன் பேசும் வீடியோ வெளியாகியிருப்பது அதிமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…