சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் போட்டிடுவேன் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ் பதவியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அண்ணாமலை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அக்கட்சியில் இணைந்த பின்னர் தமிழகத்தில் முதல் முறையாக அவர் கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்திற்கு இன்று வந்தார். அப்போது, பேசிய அண்ணாமலை, தொண்டனுக்கும் தலைவனுக்கும் பாஜக கட்சியில் பெரிய வித்யாசம் இல்லை. இங்குள்ள ஒவ்வொரு தொண்டனும் பல போராட்டங்களை சந்தித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும், ஒன்றுமில்லாத போதும் தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்த்து உள்ளீர்கள். தமிழகம் புன்னிய பூமி என்றும் வழிபாட்டு முறையோடு இருந்த தமிழகம், கடந்த 52 ஆண்டுகளாக கடவுள் இல்லை என்று கூறிய கூட்டத்தால் மாற்றுப்பாதையில் சென்றது. தமிழகம் புன்னிய பூமி, இதனை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது முதல் வேலை. திராவிட கட்சிகளிடம் மீடியா இருபதால் மக்கள் மனதில் பிம்பத்தை விதைத்துள்ளனர். பல மாநிலங்களில் பா.ஜ.க இல்லை என்று சொன்ன நிலையில், இன்று பெருமான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது.
அதேபோல் தமிழகத்திலும் ஆட்சி வரும். கட்சியில் சேர்ந்து 3 நாள் தான் ஆகிறது எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தீர்கள் மாற்றத்தை உருவாக்கி காட்டுவோம் என்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். சட்ட பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் போட்டிடுவேன் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…