நான் சர்வாதிகாரியாக மாறுவேன் -காரணத்தை விளக்கிய ஸ்டாலின்
கட்சியின் நலனுக்காக சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், கட்சியின் நலனுக்காக சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தெரிவித்தேன்.திராவிட இயக்க வரலாற்றில் அறவழிப் போராட்டங்கள் நடைபெறும்போது, அதை தலைமையேற்று நடத்த சர்வாதிகாரிகள் நியமிக்கப்படுவது உண்டு.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேரறிஞர் அண்ணாவை சர்வாதிகாரியாக பெரியார் நியமித்தார், அதற்காக அண்ணா ஆயுதம் ஏந்தவில்லை, அன்பும், அறிவும் கொண்டு போராட்டத்தை நடத்தினார் என்று தெரிவித்துள்ளார்.