முதலமைச்சர் பழனிசாமியை நான் அடிப்பேன்..!கருணாஸ் ஆவேச பேச்சு ..!முதலமைச்சர் அடித்தால் வாங்கிக் கொள்வார்…!அதிமுக சூலூர் சட்டமன்ற உறுப்பினர்  பரபரப்பு பேச்சு

Published by
Venu

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஏசுநாதர் போல, அடித்தால் வாங்கிக் கொள்வார் என்று  அதிமுக சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று (செப்டம்பர் 16 ஆம் தேதி ) முக்குலத்தோர் புலிப்படை ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகரும் சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் தமிழ்நாடு முதல்வரையும் , காவல்துறை அதிகாரிகளையும் சரமாரியாக பேசினார்.அது மட்டுமில்லாமல் அவர் பேசும் எடப்பாடி அரசு அமைய காரணம் நான் தான்.கருணாஸ் இல்லாமல் இந்த அரசாங்கம் அமைந்து இருக்காது. எனவே  நான் முதல்வரையே அடிப்பேன்னு முதல்வருக்கு தெரியும்.முதல்வருக்கு நான் அடிப்பேன்னு பயம் இப்பவும் இருக்கும் வேணும் என்றால் போன் செய்து கேட்டுப் பாருங்கள் என்றார் காட்டமாக.

 

தொடர்ந்து பேசிய கருணாஸ் , சென்னை தியாகராயர்நகர் சரக துணை காவல் ஆணையர் அரவிந்தனை கண்டிக்க ஆரம்பித்தார்.அப்போது அவர் காவல்துறை ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார்.காவல்துறை முடிந்தால் என்னிடம் மோதி பார்க்கட்டும்.கக்கி சட்டையை கழத்தி வைத்து விட்டு என்னிடம்போலீஸ்  மோதிபார்க்கட்டும் என்றார்.அது மட்டுமில்லாமல் போலீஸ் அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும் பின்னாடி 10 பேர் சேர்ந்து வந்த போலீஸ்க்கு என்ன ஜமீந்தாருனு நினைப்பா இல்ல குறுநில மன்னன்னு நினைப்பா போலீஸ் அதிகாரிகளுக்கு என்று காவல்துறையை விளாசினார்.

 

Image result for cm  palanisamy

தொடர்ந்து போலீசை கண்டித்த அவர் , போலீஸ் திமிர் பிடித்து அலைகிறார்கள் அதனால் தான் ஒருவரை பிடித்தல் அவனுடைய கைய ஒடி , காலை ஓடி என்று ரவுடி தனமாக பேசுகிறார்கள்.போலிஸ் இப்படி கைய , காலை ஓடிப்பேன்னு முக்குலத்தோர் புலிப்படையிடம் வைத்தால் அந்த போலீஸ் காலை ஓடைக்கணும் என்றார்.நான் நினைத்தால் சம்மந்த பட்ட போலீஸ் அந்த பதவில இருக்க முடியாது அன்னைக்கே அந்த போலீஸ் டிரஸ்ஷை காளத்தி இருப்பேன் இது போலீஸ் துறையின் தலைவர் ராஜேந்திரன் அவருக்கு தெரியும் என்று காவல்துறையை சாடினார்.

 

இதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் திருவாடானை சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அவதூறாக பேசுதல்,தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல்  முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, காவல்துறை அதிகாரிகள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் தலைமறைவாக உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்தது . மேலும் தலைமறைவாக உள்ள எம்எல்ஏ கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுகவின் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் கருணாஸ் ஆவேச பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஏசுநாதர் போல, அடித்தால் வாங்கிக் கொள்வார்.ஆனால்  கருணாஸுக்குத் தைரியம் இருந்தால் என்னை அடிக்கட்டும் .மேலும் கருணாஸை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஆவேசமாக பேசியுள்ளார்.

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

7 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

7 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

8 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

9 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

11 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

11 hours ago