தேர்தலில் வெற்றி பெற்றதும் முதலில் வந்து பாராட்டுவது நானாக தான் இருப்பேன்…! ஸ்டாலினை முத்தமிட்டு வாழ்த்திய சிறுவன்…!

Default Image

‘தேர்தலில் நீங்கள் வெற்றி அடைந்தவுடன் நான் தான் முதல் ஆளாக வந்து உங்களை பாராட்டுவேன்.’ என மழலை மொழியில் ஸ்டாலினை வாழ்த்திய சிறுவன். 

தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்றங் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என ஒவ்வொரு தொகுதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று பொள்ளாச்சியில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அந்த நிகழ்வில், ஸ்டாலினை முத்தமிட்ட சிறுவன் ஒருவன், மழலை குரலில் கலைஞரை வாழ்த்தி பேசினார். அந்த சிறுவனுக்கு ஸ்டாலின் அவர்கள் பொண்ணாடை போர்த்தி பரிசுகளை வழங்கினார். அதன் பின் பேசிய சிறுவன், ‘தேர்தலில் நீங்கள் வெற்றி அடைந்தவுடன் நான் தான் முதல் ஆளாக வந்து உங்களை பாராட்டுவேன்.’ என மழலை மொழியில் வாழ்த்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 02012025
fog and a chance of light rain
power cut Description
Minister Anbil Mahesh
Gautam Gambhir rohit sharma
Chennai Metro