நீங்கள் ஆணையிட்டால் அதை செய்யக்கூடிய முதல்வராக இருப்பேன் – முதல்வர் பழனிசாமி
மக்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் ஓடோடி வரக்கூடிய பழனிசாமியாக இருப்பேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் ஆத்தூர் செல்லியம்பாளையத்தில் அதிமுக மகளிர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள். மகப்பேறு நிதியுதவி திட்டத்தை ரூ.18,000ஆக உயர்த்தி வழங்குகிறோம். தொழிலதிபர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் அதிமுக அரசு. ரூ.82,000 கோடி கடன் உதவி வழங்கியுள்ளோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்தது என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆத்தூர் தாலுகாவில் உள்ள தலைவாசல் இனி தனி தாலுகாவாக செயல்படும் என அறிவித்துள்ளார். தான் மந்திரவாதி அல்ல, சொல்வதை சேயும் செயல்வாதி என ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது மனுக்களை வாங்கவில்லை என்றும் தற்போது தேர்தல் வரவுள்ளதால் மனுக்களை வாங்கி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என குற்றசாட்டினார். முதல்வராக வேண்டும் என்று முக ஸ்டாலின் துடிக்கிறார் என விமர்சித்தார்.
மேலும், மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், ஓடோடி வரக்கூடிய முதல்வராக பழனிசாமியாக இருப்பேன் என்றும் நீங்கள் ஆணையிட்டால் அதை செய்யக்கூடிய முதல்வராக இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். திமுகவின் தில்லுமுல்லுகளை தவிடுபொடியாக்கி அதிமுக வெற்றிபெற மகளிர் பாடுபட வேண்டும் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.