தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்தித்தது. அதிலும், கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கட்சிகளும் படுதோல்வி அடைந்தன.
மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார். தேர்தல் தோல்விக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் பொதுச்செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்த கட்சியில் இருந்து விலகினர். மேலும், கட்சியில் ஜனநாயகம் இல்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இந்நிலையில், கமல் வெளியிட்டுள்ள வீடியோவில், உயிரே உறவே தமிழே ஊரடங்கினாலும் வாய் அடங்காது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு அவற்றில் ஒன்றாக நாம் ஆகிவிடக்கூடாது. தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றி பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம். மக்களிடம் அறிமுகம் இல்லாதவர்களையும், சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலில் நட்சத்திரங்களாக மின்ன வைக்க நாம் நினைத்தது தான் சிலருக்கு சர்வாதிகாரமாக தெரிகிறது.
திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புக்களை கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்து வழி செய்தது அவர்களுக்கு ஜனநாயகத்தின் உச்சகட்டமாக தெரிந்திருக்கிறது. பிறகு அவளுக்கு தெரியாமல் போய்விட்ட ஜனநாயகமும் அனைவரும் அறிந்தவை
பிறகு கால சூழலில் கண்ணுக்கு ஏற்பட்ட மறதியில் அது அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. கூட்டணி வைத்துக் கொள்வதில் நான் காட்டிய வெளிப்படைத்தன்மையும், அதை தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு பொறுப்பு கொடுத்த ஜனநாயகமும் அனைவரும் அறிந்தவை. தோல்விக்குப் பின் அவரவர்க்கு இருக்கும் தார்மீகக் கடமை ஏற்பது நல்ல ஜனநாயகவாதி செய்யும் செயல், கடமைகளை மறந்து நிகழ்ந்துவிட்ட தவறுகளை கொட்ட ஒரு குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாகப்படுகிறது.
அது ஜனநாயகமே அல்ல,நம் மய்ய கிணறு அவ்வளவு சாதாரணமாக தூர்ந்து போய்விடாது. 40 ஆண்டு காலம் இறைத்து நீர் வார்த்ததில் உடல் சற்றே வேர்த்தாலும் உற்சாக ஊற்று ஊறிக்கொண்டே இருக்கும் என்பது நமக்கு நம் அனுபவம் சொல்லும் பாடம். இதுதான் நாம் செய்யப்போகும் விவசாயம் என்று களம் இறங்கி விட்ட நமக்கு நம் நீர்நிலையை சுற்றித்தான் வேலை நாடோடிகள், யாத்திரிகர்கள் அப்படியல்ல ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்களாக அவர்கள் இருக்கும் பட்சத்தில் வியாபாரம் உள்ளவரை தங்குவார்கள் பிறகு அவர்கள் வெளியேறி விடுவார்கள் என கூறியுள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…