எனக்கு கட்சியில் புதிய பதவி வழங்குவார்கள் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜே.பி நாட்டா வெளியிட்டார். அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டது.
குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்த ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை. செய்தி தொடர்பாளர் பட்டியலில் கூட தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பாஜக நிர்வாகிகள் கூடஇடம்பெறவில்லை.இதனால் தமிழக பாஜகவில் சற்று அதிருப்தி நிலவி வந்தது.
இந்நிலையில் பாஜகவின் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், எனக்கு கட்சியில் புதிய பதவி வழங்குவார்கள். அதை பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை.இனி எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முடியாது .காங்கிரஸ் கட்சியில் முதலில் தலைவரை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள், பின்னர் ஆட்சிக்கு வருவது பற்றி யோசிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…