மு.க.ஸ்டாலினின் நம்பிக்கையை நிறைவேற்ற துணையாக இருப்பேன் என்று திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பின் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் ஆகஸ்ட் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.மேலும் திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.
மேலும் திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இன்று திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக டி.ஆர். பாலு நியமனம் செய்யப்பட்டார். டி.ஆர்.பாலுவை நியமித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.இதற்கு முன்னதாக திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக துரைமுருகன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் முதன் முறையாக மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இதன்பின்னர் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு இன்று கூறுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கையை நிறைவேற்ற துணையாக இருப்பேன் என்று உறுதிபட கூறியுள்ளார்.
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…