நல்லவர்களுக்கு மட்டுமே நான் பதில் சொல்வேன் -துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
நல்லவர்களுக்கு மட்டுமே நான் பதில் சொல்வேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் உடன் சென்றிருந்தனர்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனக்கு ஆளுநர் பதவி வேண்டியும், மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மக்களவை உறுப்பினர் பதவி வேண்டியும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்துள்ளதாக அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மதுரையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில்,தங்கத் தமிழ்ச்செல்வனின் கருத்துக்கு நான் பதில் கூற மாட்டேன் ,நல்லவர்களுக்கு மட்டுமே நான் பதில் சொல்வேன்.தொண்டர்களின் இயக்கமாக அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.