மக்களிடம் எப்போதும் 100% உண்மையாக இருப்பேன் என்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சார கூட்டத்தில் முக ஸ்டாலின் பேச்சு.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் முக ஸ்டாலின் பல்வேறு விதமாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராமங்களுக்கு சென்று மக்கள் கிராம சபை கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
இந்நிலையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற தலைப்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதி மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை மனுவாக வாங்கி, ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் அதனைத் தீர்க்க முடிவு செய்யும் திட்டத்தின்படி, ஜனவரி 29ஆம் தேதி இன்று திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் முக ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே எனது முதல் பணி. இதுதான் மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழி. மக்களிடம் எப்போதும் 100% உண்மையாக இருப்பேன். 184 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஒரே கட்சி திமுக, அந்த எண்ணிக்கையை தாண்டி இந்த முறை வெற்றி பெறுவோம். மக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டபின், மனுக்கள் அடங்கிய பெட்டியை பாதுகாப்பாக சீல் வைத்தார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் புகார்களை தீர்க்க தனியாக ஒருதுறை அமைக்கப்படும். அதன் மூலம் இந்த கோரிக்கை மனுக்கள் துறை வாரியாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்தத் துறைவாரியாக புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீங்கள் என்னைக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே, மனுவுக்குப் பதிவு எண் தருகிறோம். உங்கள் பிரச்சனைகளை நான் நிச்சயம் தீர்த்து வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…