முதலமைச்சர் பழனிசாமியை நான் அடிப்பேன் …!கோவத்தை உண்டாக்கினால் கொலை பண்ணுங்க…!கருணாஸ் ஆவேச பேச்சு…!முதலமைச்சர் கவனத்திற்கு சென்ற பேச்சு ..!
கருணாஸ் பேசியது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறு முக்குலத்தோர் புலிப்படை ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகரும் சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் தமிழ்நாடு முதல்வரையும் , காவல்துறை அதிகாரிகளையும் சரமாரியாக பேசினார்.அது மட்டுமில்லாமல் அவர் பேசும் எடப்பாடி அரசு அமைய காரணம் நான் தான்.கருணாஸ் இல்லாமல் இந்த அரசாங்கம் அமைந்து இருக்காது.கூவத்தூர் விடுதி இருப்பதை சொன்னவன் நான்.அங்கே தான் ஒருவரும் தப்பிக்க முடியாது என்பதற்காக நம்பிக்கைவாக்கெடுப்பு சமயத்தில் கூவத்தூர் விடுதியை காட்டினேன்.இல்லை என்று மறுக்க முடியுமா என்று கூறிய கருணாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை பத்திரமாக தங்கவைத்து இந்த அரசாங்கம் உருவாக்க நான் தான் கரணம் எனவே நான் முதல்வரையே அடிப்பேன்னு முதல்வருக்கு தெரியும்.முதல்வருக்கு நான் அடிப்பேன்னு பயம் இப்பவும் இருக்கும் வேணும் என்றால் போன் செய்து கேட்டுப் பாருங்கள் என்றார் காட்டமாக.
தொடர்ந்து பேசிய கருணாஸ் , சென்னை தியாகராயர் நகர் சரக துணை காவல் ஆணையர் அரவிந்தனை கண்டிக்க ஆரம்பித்தார்.அப்போது அவர் காவல்துறை ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார்.காவல்துறை முடிந்தால் என்னிடம் மோதி பார்க்கட்டும்.கக்கி சட்டையை கழத்தி வைத்து விட்டு என்னிடம்போலீஸ் மோதிபார்க்கட்டும் என்றார்.அது மட்டுமில்லாமல் போலீஸ் அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும் பின்னாடி 10 பேர் சேர்ந்து வந்த போலீஸ்க்கு என்ன ஜமீந்தாருனு நினைப்பா இல்ல குறுநில மன்னன்னு நினைப்பா போலீஸ் அதிகாரிகளுக்கு என்று காவல்துறையை விளாசினார்.
தொடர்ந்து போலீசை கண்டித்த அவர் , போலீஸ் திமிர் பிடித்து அலைகிறார்கள் அதனால் தான் ஒருவரை பிடித்தல் அவனுடைய கைய ஒடி , காலை ஓடி என்று ரவுடி தனமாக பேசுகிறார்கள்.போலிஸ் இப்படி கைய , காலை ஓடிப்பேன்னு முக்குலத்தோர் புலிப்படையிடம் வைத்தால் அந்த போலீஸ் காலை ஓடைக்கணும் என்றார்.நான் நினைத்தால் சம்மந்த பட்ட போலீஸ் அந்த பதவில இருக்க முடியாது அன்னைக்கே அந்த போலீஸ் டிரஸ்ஷை காளத்தி இருப்பேன் இது போலீஸ் துறையின் தலைவர் ராஜேந்திரன் அவருக்கு தெரியும் என்று காவல்துறையை சாடினார்.
அடுத்து பேசிய அவர் நாங்கள் ஒரு நாளைக்கு சரக்குக்கே லட்சம் ரூபாய் செலவு செய்கிறோம்.நீங்கள் முக்குலத்தோர் புலிப்படை , உங்களை வாழ விடாமல் யாரும் கோவத்தை உண்டாக்கினால் நீங்கள் கொலை பண்ணிடு வாங்க நான் பாத்துக்கிறேன்.நம்ம பள்ள விழக்கி முடித்துக்கிறதுக்குள்ள கொலை செய்து முடித்து விடுவோம் என்றார்.நான் சும்மா சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம் நீங்கள் கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றால் நான் என்னுடைய சொத்தை விற்று உங்களை பெயில் எடுப்பேன்.அது மட்டுமில்லாமல் என்னுடைய வீடு , சொத்துக்களை விற்று உங்களுடைய கேஸ் , உங்களுடைய வீட்டு செலவு , உங்களோட பிள்ளைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் ஜெயிலுக்கு சும்மா பிகினிக் போறமாதிரி போய்ட்டு வாங்க.நான் சொல்லுறேன்னு நெனைக்காதீங்க உறுதியாக செஞ்சுடுவேன் என்றார்.நடிகர் கறுவுநஸ் பேசியது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவ கூறுகையில்,கருணாஸ் பேசியது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.எனவே கருணாஸ் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.