நீர் ஆதார திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமரை வரவேற்கிறேன். நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ணனுமதி அளிக்க வேண்டும். தண்ணீரை வீணாக்காமல், அவற்றை முழுமையாக பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றம்.
நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் ஒப்படைக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார். இதன்பின் பிரதமர் மோடி பல்வேறு அரசு நலத் திட்டங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். தூத்துக்குடி துறைமுக சாலை விரிவாக்கம், சூரிய மின் உற்பத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். கீழ்பவானி பாசன பகுதி சீரமைத்தல் – புனரமைத்தல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
மேலும், 8 ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. என்.எல்.சியின் 2 புதிய அனல் மின் நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…