“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
எனக்கு வெளியே வர சங்கடமாக இருந்ததால், சம்மனை படிப்பதற்காகத்தான் கிழிக்கச் சொன்னது நான்தான். முடிந்தால் என்னை கைது செய்யட்டும்.

சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய தினம், சம்மனை கிழித்த காவலாளி, உதவியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தற்போது, சீமானின் மனைவி கயல்விழி செய்தியாளர் சந்தித்து பேசியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “போலீஸ் ஈகோ அடிப்படையில் செயல்பட்டு வருவது தெரிகிறது. எத்தனையோ வழக்கு அவர் மேல இருக்கு, அவரை அசிங்கப்படுத்தத்தானே பாலியல் குற்றம்னு போடுறீங்க.
காவல் ஆய்வாளர் பிரவீனுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடருவோம். எங்கள் வீட்டு பாதுகாவலர் துப்பாக்கியை எடுத்துதான் கொடுத்தார், மிரட்டவில்லை. பாதுகாவலரை கைது செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை.சம்மனை படிக்க வேண்டும் என்பதற்காகவே அதை கிழித்துக் கொண்டு வரச் சொன்னேன். எனக்கு வெளியே வர சங்கடமாக இருந்ததால், சம்மனை படிப்பதற்காகத்தான் கிழிக்கச் சொன்னது நான்தான். முடிந்தால் என்னை கைது செய்யட்டும்.
அந்தம்மா (நடிகை) எத்தன நாளா பேசிட்டு இருக்கு. அவரை அசிங்கப்படுத்தத்தானே பாலியல் குற்றம், பாலியல் குற்றம்னு போடுறீங்க. அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்க என்ன மரியாதை கொடுக்குறீங்க? எங்களை அசிங்கப்படுத்துகிறீர்களா?. அவர் மக்களுக்கான நேர்மையான தலைவர். பாலியல் வழக்கின் விசாரணையை விரைவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது.
அதற்காக அடுத்த நாளே வீட்டுக்கு வருவீர்களா? எங்களை மனரீதியாக துன்புறுத்த காவல்துறை திட்டமிட்டு இதனை செய்துள்ளது. நீலாங்கரை ஆய்வாளருக்கு எங்கள் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி. நேர்மையான தலைவர் என் கணவர், சிறையை கண்டு எங்களுக்கு பயமில்லை. பாலியல் குற்றத்தை முன்வைத்து சீமானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
சீமான் வீட்டு வாசலில் பலகை
இதனையடுத்து, வீட்டிற்கு வெளியே தனியாக போர்டு வைத்து “சம்மனை இங்கே ஒட்டிச்செல்லவும்” என்று எழுதியிருக்கின்றனர் சீமானின் உதவியாளர்கள். மேலும், சீமான் வீட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ள பலகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவரது மனைவி கயல்விழி, “நிறைய சம்மன்கள் வந்து கொண்டே இருப்பதாக கேள்விப்பட்டோம், அதனால் சம்மனை ஒட்ட போர்டு வைத்துள்ளோம், இன்னும் ஒட்டுங்க…. நல்லாருக்கு.. கதவில் ஒட்ட வேண்டாம். எங்களால்சுத்தம் செய்ய முடிவவில்லை. அதனால் சம்மனை ஒட்ட போர்டு வைத்துள்ளோம்.