மக்களால் முதன்முறையாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
மேயர் என்பதை பதவியாக நினைக்காமல் பொறுப்பு என நினைத்து செயல்பட வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மேயர் நிர்வாகப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். அப்போது, உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். எந்த முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காமல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களால் முதன் முறையாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். மேயர் என்பதை பதவியாக நினைக்காமல் பொறுப்பு என நினைத்து செயல்பட வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒவ்வொரு அடியையும் கவனமுடன் எடுத்து வைக்க வேண்டும். விதிமீறல் இல்லாமல் உள்ளாட்சி பிரதிநிதிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முறையாக செலவிடப்படுவதை கண்காணிக்க வேண்டும்.
அனைத்து மக்களுக்கும் நிலையான, சீரான, நீடித்த வளர்ச்சியே அரசின் நோக்கம். மேயர்கள் மாநகராட்சி கூட்டத்தை கால முறைப்படி கூட்ட வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண காணவேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.