ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த கேப்டன் வருண் சிங் இல்லை என்ற செய்தி கேட்டு சோகமடைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் கேப்டன் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், 80 சதவீத தீக்காயங்களுடன் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை என்ற சோகமான செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்தேன். அவரது வீரமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகமாக அமையும். மேலும் அவர் நம் மனதில் என்றும் வாழ்வார் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…