“ஏழை குடும்பத்தைச் சேர்ந்ததால் என்னை அறிமுகம் செய்ய விடாமல் தடுத்தனர்” – அமைச்சர் எல்.முருகன் கண்ணீர் மல்க பேச்சு…!

Default Image

ஏழை குடும்பத்தை சேர்ந்ததால் நாடாளுமன்றத்தில் பிரதமர் அவர்களால் என்னை அறிமுகம் செய்ய விடாமல் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி தடுத்தது என்று மத்திய இணை அமைச்சர் திரு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கில் ‘மக்கள் ஆசீர்வாத யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோவையில் தொடங்கியுள்ளார். இந்த யாத்திரை வரும் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது என கூறப்பட்டது.

இதனையடுத்து,செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றபின் மக்களை சந்திக்க தமிழகத்தில் யாத்திரை செய்கிறேன். நாடு முழுவதும் மக்கள் ஆசீர்வாத யாத்திரை நடைபெறுகிறது. கொரோனா விதிகளை பின்பற்றியே நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்.

கொங்குநாடு என்பது மக்கள் முடிவு செய்ய வேண்டியது. மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்துவைக்கக்கூடிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது முதன்முறையல்ல, ஏற்கனவே பல கோயில்களில் இருக்கின்றனர். மேலும், சர்வதேச நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,யாத்திரை கூட்டத்தில் மக்களிடையே மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவர்கள் பேசியதாவது:

எதிர்க்கட்சிகள் என்ன செய்தது?:

“தமிழகத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் செய்ய துணியாததை பாஜக செய்துள்ளது.சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த,செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தை சார்ந்த ஒருத்தரை மாநில தலைவராக்கியது பாஜக.அதோடு நிற்கவில்லை,

சுதந்திரமடைந்து 75 வருடத்திற்கு பிறகு எந்தவொரு சமுதாயத்தில் ஒருத்தர் இருந்து மத்திய அமைச்சராகவில்லையோ,அந்த சமுதாயத்தில் இருந்து ஒருவரை முதல் முறையாக அமைச்சராக்கி அழகு பார்த்திருப்பது பிரதமர் மோடி அவர்கள்தான்.அதன்படி,ஒண்டிவீரரின் வாரிசான நம்பிக்கைக்கு உரிய பாத்திரமாக உள்ள சமுதாயத்தில் இருந்து ஒருவரை மத்திய அமைச்சரானார்.ஆனால்,எதிர்க்கட்சிகள் என்ன செய்தது?.

இந்திய வரலாற்றில்: 

பிரதமர் மோடி அவர்களால்,ஏழை குடும்பத்தில் இருந்து இந்திய வரலாற்றில் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த 12 பேர் இணை அமைச்சர் பதவி பெற்றுள்ளனர்.மேலும்,எட்டு பேர் மலைவாழ் மக்கள்,28 பேர் ஏழை(ஓபிசி) சமுதாயத்தை சார்ந்தவர்கள்.இவர்களை மத்திய அமைச்சர்களாக பாஜக ஆக்கியுள்ளது.

ஏன் ஒரு ஏழைக் குடும்பத்தை சார்ந்தவர்,மத்திய அமைச்சராக ஆகக் கூடாதா?:

இவர்களை எல்லாம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.ஆனால்,நான் ஏழைக் குடும்பத்தில் இருந்து மற்றும் ஒரு செருப்பு தைக்கும் குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன்.இதனால்,என்னை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய விடாமல் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சி, திமுக கட்சி மற்றும் தமிழக எதிர்க்கட்சி எம்பிக்கள் உள்ளிட்டவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தனர். ஏன் ஒரு ஏழைக் குடும்பத்தை சார்ந்தவர்,மத்திய அமைச்சராக ஆகக் கூடாதா?,இங்குள்ள திமுக கட்சி இருபது வருடங்களாக ஆட்சியில் இருந்தபோது ஒரு ஏழை சாதாரண குடும்பத்தை சார்ந்தவர்களை மத்திய அமைச்சராக ஆக்கினார்களா?.இல்லை.

இவ்வாறு இருக்கையில்,என்னை மத்திய அமைச்சராக ஆக்கிய பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தியது பிரதமர் மோடி அவர்கள்தான்”,என்று கண்ணீர் மல்க பேசினார்.

எப்போது இருட்டாகும்:

மேலும்,”கர்ப்பிணி பெண்கள்,தாய்மார்கள் எப்போது இருட்டாகும் அல்லது காலை 5 மணிக்கு முன்னாடியே இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.ஆனால்,அந்த துயரத்தை நீக்கி ஒவ்வொருவர் வீட்டிற்கும் இலவச கழிப்பறை கட்டி கொடுத்தார் பிரதமர் மோடி அவர்கள்.தாய்மார்கள் அடுப்படியிலே பட்ட துயரத்தை போக்கி எட்டு கோடி பேருக்கு இலவசமாக கேஸ் இணைப்பு கொடுத்தவர் பிரதமர்தான்.

விவசாயிகளின் தற்கொலை:

முன்பு எல்லாம் செய்தித்தாளை திறந்தால் விவசாயிகளின் தற்கொலை செய்தி தான் வரும்.ஆனால்,2014-க்கு பின்னர் பிரதமராக மோடி அவர்கள் வந்த பிறகு ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வரவில்லை.காரணம் பிரதமர் மோடி அவர்கள்,ஒவ்வொரு வருடமும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.6 ஆயிரம் தொகையை செலுத்துகிறார்.

சமூகநீதியின் காவலர் :

உண்மையான சமூக நீதியை போற்றுபவர் பிரதமர் நரேந்திரமோடி அவர்களும் பாஜகவும் தான்.இதனால்,சமூகநீதியின் காவலர் பிரதமர் மோடி அவர்கள்தான்.அனைத்து சமுதாயத்தினரும் கலந்த அமைச்சரவைதான் பிரதமர் மோடி அவர்களின் அமைச்சரவை.

திமுக 100 நாள் ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்யவில்லை. குடும்ப பெண்களுக்கு1,000 ரூபாய் கொடுப்பதாக சொன்ன அறிவிப்பை நிறைவேற்றவில்லை.மாணவர்களின் கல்விகடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இல்லை”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்