மோதிலால் தற்கொலை செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்-ராமதாஸ்.!
நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு பயத்தால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே இன்று தமிழகத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நீட் தேர்வை எதிர்கொள்வதில் உள்ள அச்சம் காரணமாக நாமக்கல் நகரத்தைச் சேர்ந்த மோதிலால் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வை எதிர்கொள்வதில் உள்ள அச்சம் காரணமாக நாமக்கல் நகரத்தைச் சேர்ந்த மோதிலால் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— Dr S RAMADOSS (@drramadoss) September 12, 2020