ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்-கூட்டத்திற்கு பின் ரஜினி கருத்து
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.இதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன்.கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம்.ஆனால் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம் உள்ளது. அதுபற்றி பின்னர் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.