தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞருமான நாகசாமி மறைவுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் நாகசாமி, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞராக இருந்தவர். 35 ஆண்டு காலம் தொல்லியல் துறைக்கு பணியாற்றிய நாகசாமி சென்னை பல்கலைகழகத்தில் சம்ஸ்கிருத முதுகலை பட்டதாரியானவர், பின்னர் பூனா பல்கலைகழகத்தில் தொல்லியல் ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார். 1930 இல் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் பிறந்த நாகசாமி 1959-1963 வரை சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக தன் பணியைத் தொடங்கியிருக்கிறார்.
மத்திய அரசு, நாகசாமியின் பணிகளை பாராட்டி, 2018-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. தற்போது வயது முதிர்வு உடல்நலம் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாகசாமி மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்று முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றியவரும், தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞருமான பத்மபூசன் நாகசாமி அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…