துயரச் செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்., உதவி செய்ய தமிழக அரசு தயார் – முதல்வர் அறிக்கை

Default Image

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது எனது முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள நந்ததேவி பணிக்குன்றில் ஒரு பகுதி திடீரென்று நேற்று உடைந்ததால் அப்பகுதிகளில் உள்ள நதிகளில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் 18 பேர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறை நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்பு முழு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. திடீர் வெள்ளப்பெருக்கில் பரிதமாக சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், நிதி வழங்கியும் வருகிறார்கள்.

அந்த வகையில், இதுகுறித்து முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உத்தரகாண்ட்- அலக்நந்தா, தவுலிகங்கா நதிகளில் பனிப்பாறை உடைந்து உண்டான வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்