தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Default Image

தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் மிகவும் மோசமாகி கொண்டியிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முப்படை தளபதியின் மரணம் குறித்து அவதூறு பரப்பிய மாரிதாஸின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்வி பதிலளித்த அண்ணாமலை, மாரிதாஸ் பேசியதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார்.

மாரிதாஸ் போட்ட ட்வீட்டில் எந்த வார்த்தை தவறு என்று சொல்லுங்கள் பார்ப்போம். தவறான கருத்துகளுடன் ஏராளமானோர் ட்வீட் செய்துள்ளனர். அவர்கள் மீதெல்லாம் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் மிகவும் மோசமாகி கொண்டியிருக்கிறது.

CRPC என்பது தமிழகம் மட்டுமல்ல இந்திய முழுவதற்குமானது. தமிழ் தெரிந்த ஒருவர் வேறு மாநிலத்தில் வழக்கு பதவி செய்தால் இங்குள்ளவர்களைக் கைது செய்ய காவல்துறைகளுக்கு அதிகாரம் இருக்கிறது. பாஜக 17 மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. எங்கள் பொறுமையைச் சோதிக்க வேண்டாம்.

டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை, சைக்கிளில் செல்லவும் செல்பி எடுப்பதற்குமா டிஜிபி. அதனால் இங்கு ஆட்சி நடத்துவது வேறு யாரோ. நேர்மையான டிஜிபியாக இருந்தால் பிபின் ராவத் உயிரிழப்பு குறித்து தவறான கருத்து கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

தமிழக காவல்துறை one of the worst performing police ஆக உள்ளது. காவல்துறை ஒரு கட்சியை சார்ந்த ஏவல் துறையாக உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். கட்சி பொறுமையாக இருக்கிறது, பொறுமையும் ஒரு அளவுக்குத்தான், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்