இன்று நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி கூட்டத்தை நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என்று காவல்துறையினரை எச்சரிக்கிறேன் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசு சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தேனி – போடி விவசாயிகள் மாநாட்டை நடத்த காங்கிரஸ் இளைஞரணி சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று காலை 10 மணியளவில் தேனி – போடி சாலையில் நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு வருகிற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கொடியுள்ள வாகனங்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
டிராக்டர்களிலும் விவசாயிகள் வர முடியவில்லை. விவசாயிகள் கூட்டத்தை நடைபெறாமல் தடுப்பதற்கு காவல்துறையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய ஜனநாயக சட்டவிரோத செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன்.இன்று நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி கூட்டத்தை நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என்று காவல்துறையினரை எச்சரிக்கிறேன்.விவசாயிகள் அமைதியான முறையில் சட்ட ஒழுங்குக்கு பாதிப்பு இல்லாமல் காங்கிரஸ் இளைஞர் அணி
நடத்துகிற விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை அறிவுறுத்தும்படி தமிழக தலைமை காவல்துறை அதிகாரி J.K.திரிபாதி அவர்களையும், தமிழக உள்துறை செயலாளர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…