தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார வரவேற்கின்றேன்- முதலமைச்சர் பழனிசாமி
தை திங்கள் முதல் நாளான தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விடுமுறை அளித்துள்ள நிலையில், முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தேசிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாகும்.அந்த வகையில் தான் உச்சநீதிமன்றம் 2021ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் ஜனவரி 14 -ஆம் தேதி இடம்பெற்றுள்ளது.இந்த தினத்தில் தான் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.தமிழகத்தை பொருத்தவரை பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் தினம் அன்று ,காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாகும்.அந்தவகையில் தான் தற்போது உச்சநீதிமன்றமும் வெளியிட்டுள்ள பட்டியலில், பொங்கல் தினமான ஜனவரி 14 -ஆம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பண்டிகை வெளி மாநிலங்களில் மகர் சங்கராந்தி, பிஹூ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
ஆகவே பொங்கல் அன்று உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அழிப்பது இதுவே முதன் முறை ஆகும்.இதனால் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியியல் உள்ளனர்.மேலும் பல்வேறு அரசியல் கட்சினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதில்,தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதி மன்றம் விடுமுறை அளித்ததை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார வரவேற்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதி மன்றம் விடுமுறை அளித்ததை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார வரவேற்கின்றேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 27, 2020