டிடிஎஃப் வாசன் : உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கார் ஓட்டியதால் கைதான டிடிஎஃப் வாசனை தற்போது மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் செல்வதை அவரது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அப்போது, மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்க்காக அவர் மீது மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், இவர் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல், செல்போன் பேசியபடி செல்லுதல், கொலை முயற்சி போன்ற 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு டிடிஎப் வாசனை போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இவரை இன்று காவல் துறையினர் மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் பத்திரிக்கையாளர்களை பார்த்து,”என்னை பார்த்து தான் மக்கள் கெட்டுப்போகிறார்கள்? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது.
அதனால் கெட்டுப்போவதில்லையா? சட்டம் என்பது எல்லாருக்கும் சமம்தானே. எத்தனை பேர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றார்கள்?. குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுகிறார்கள் என்ற வழக்கு?.. ஏன்.. எனக்கு மட்டும் கொலை வழக்கு? எனக்கு நீதி வேண்டும்..” என கேள்வி எழுப்பி இருந்தார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…