மத்திய அமைச்சர் பதவி, 2 முறை தேடி வந்தும் அதை மறுத்தவன் நான்-வைகோ பேட்டி

Default Image

கடந்த வாரம்  வைகோ மீது தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.ஆனால் இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு  நிறுத்தி வைக்கப்பட்டது .

வைகோவின்  வேட்புமனு ஏற்க்கப்படுமா ? என்ற  நிலையில் இருந்தது. பின் பரிசீலனையில் வைகோவின்  வேட்புமனு ஏற்கப்பட்டது. வேட்பு மனு ஏற்புக்கு பிறகு வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்தியா சுதந்திரம் பெற்ற உடன், தேச துரோக வழக்கில் ஒருவர் தண்டனை பெற்றார் என்றால் அது நான்தான் .மத்திய அமைச்சர் பதவி, 2 முறை தேடி வந்தும் அதை மறுத்தவன் நான்.

என் குடும்பத்தில் இருந்து யாரும், பதவிகளுக்கு வர மாட்டார்கள்.திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால்தான், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறேன். என் தொண்டர்கள் மட்டுமே எனக்கு உயிர், எனக்கு பிடித்த இடம் தாயகம்.

வேட்பு மனு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை .26 ஆண்டுகளாக கட்சியில், எந்த முடிவையும் தனித்து எடுத்ததில்லை.பதவியில் இருந்தவர்கள்தான்   மதிமுகவை விட்டு சென்றார்கள்.ஆனால் லட்சியத்திற்காக யாரும் கட்சியைவிட்டு வெளியேறவில்லை என்று வைகோ பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்