சென்னையில் உள்ள என் வீட்டில் நான் ஒருவன் மட்டும் தங்கி இருப்பதால் தினமும் இரண்டு பக்கெட் தண்ணீர் மட்டும் பயன்படுத்துவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் பேசிய முதல்வர் தொடர்ந்து சில வருடங்களாக பருவமழை பொய்த்து போனதால் சென்னையில் நிலத்தடி நீரானது வெகுவாக குறைந்து விட்டது. மேலும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சோழவரம்,பூண்டி,செம்பரப்பக்கம்,புழல் உட்பட அனைத்து ஏரிகளிலும் நீரானது முற்றிலுமாக வறண்டு போய் உள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இனி வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தமிழக அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுக்கு மட்டும் தனியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அதெல்லாம் உண்மையில்லை என்றும் நானே தினமும் இரண்டு பாக்கெட் நீரை மட்டுமே பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…