தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தினேன் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்!
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தியதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் தலைமையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுகாதார துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்திற்கு பின்பதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், கூட்டத்தில் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், தமிழகத்தின் சார்பில் இந்த கூட்டத்தில் முக்கியமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் மாத இறுதிக்குள் 18 வயதை கடந்தவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியை அனைத்து மாநிலங்களும் செலுத்தி முடிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டதாக கூறி உள்ளார்.