சனாதன தர்மத்தின் மீது உங்களின் ஆழ்ந்த வெறுப்பு புரிகிறது – ப.சிதம்பரத்திற்கு அண்ணாமலை
சனாதன தர்மத்தின் மீது உங்களின் ஆழ்ந்த வெறுப்பு புரிகிறது ப.சிதம்பரம் குறித்து அண்ணாமலை ட்வீட்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்றுதெரிவித்திருந்தது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், ‘கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் (சனாதனவாதிகளைத் தவிர) என்பதை நாடறியும்.’ என பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், சனாதன தர்மத்தின் மீது உங்களின் ஆழ்ந்த வெறுப்பு புரிகிறது; ஏற்றுக்கொள்ளும் பூமியான தமிழகம் எல்லாத் திசைகளிலிருந்தும் கருத்துக்களை ஏற்றுக்கொண்டது.
ஆழ்வார்கள், நாயன்மார்கள், வள்ளுவர், பெரியார் உள்ளிட்டோரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டது. நடைமுறையில் என்ன இருக்கிறது என்பதே முக்கியம் மற்றும் தமிழகம் என்றென்றும் ஆன்மீகத்தின் உறைவிடமாக இருக்கும்! என பதிவிட்டுள்ளார்.
Your deep hate for Sanathana Dharma is understandable; TN, a land of acceptance, has accepted ideas from all directions.
It accepted the ideas of Alwars, Nayanmars, Valluvar, including Periyaar. What matters is what’s in practice & TN will forever be an abode for spirituality! https://t.co/JnUKDJIKvw
— K.Annamalai (@annamalai_k) August 11, 2022