குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன் – முக ஸ்டாலின்

குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன் என்று குடும்பக்கட்சி என்ற புகாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக கட்சியின் மீது பல ஆண்டுகளாக வைக்கப்படும் விமர்சனம் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்று கூறப்பட்டு வருகிறது. அதன்படி, மறைந்த கலைஞர் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இளைஞர் அணி பொறுப்பு வழக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திண்டிவனம் தொகுதி-மரக்காணம் பேரூராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் மக்கள் வார்டு சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய முக ஸ்டாலின், குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன். நான் நேரடியாக அரசியலுக்கு வரவில்லை, சிறுவயதிலிருந்து கட்சி உணர்வோடு கட்சி வழியாக பதவிக்கு வந்தேன் என்று குடும்பக்கட்சி என்ற புகாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடியால் கூட மக்கள் கிராம சபை கூட்டத்தை தடுக்க முடியாது என்றார். இதனிடையே, கிராம சபை கூட்டம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அரசு அனுமதி வழங்கப்படாத நிலையில், கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, திமுகவின் ’கிராம சபை’ கூட்டங்கள் இனி ’மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரில் நடத்தப்படும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025