வீட்டை தொட்டு பார்த்தேன்…! கட்டிடம் முறையாக கட்டப்படவில்லை – திருமாவளவன்
புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக மக்கள் தங்களிடம், குறைகளை புகார்களாக தெரிவித்துள்ளனர்.
சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து,அங்கு சமீபத்தில் குடியேறிய பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம், கடந்த 2016-ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 864 வீடுகள் இருக்கின்றன.
இந்த கட்டிடம் தொடர்பாக குற்றசாட்டுகள் எழுந்ததையடுத்து, அமைக்காஹ்ர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில், குடிசைமாற்று வாரிய உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
இந்நிலையில், இந்த குடியிருப்பை பார்வையிட்ட திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கட்டிடம் தொடர்பாக மக்கள் தங்களிடம், குறைகளை புகார்களாக தெரிவித்துள்ளனர். கட்டிடம் முறையாக கட்டப்படவில்லை. எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
நாங்களும் சில இடங்களை தொட்டு பார்த்தோம். பூச்சி சரியாக பூசப்படவில்லை. மேலும் அரசாங்கம் ஒவ்வொரு குடும்பமும் ரூ.1.50 லட்சம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறது. நாங்கள் தினக்கூலிகள். எனவே எங்களால் இந்த தொகையை கட்ட இயலாது. எனவே இதை அரசின் பார்வைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும், குடியேறி பல நாட்கள் ஆன நிலையில், குடிநீர் வசதி மற்றும் லிப்ட் வசதி இல்லை என்றும் கூறியுள்ளார்.