எனக்கும் கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது-அமைச்சர் ஜெயக்குமார் மைத்ரேயனுக்கு பதில்
சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 12ம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் தமிழ்மொழியை குறைத்து பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் . எலக்ட்ரானிக், பேட்டரி கார்களுக்கு 5% வரியை குறைக்க கோரிக்கை வைத்தோம்.
61 பொருட்களுக்கு வரி குறைப்பு, வரி விலக்கிற்கான கோரிக்கை வைத்துள்ளோம். பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது.முந்தைய காலங்களில் எனக்கும்கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது, அதற்காக நான் அழுதேனா? என்று அமைச்சர் ஜெயக்குமார் மைத்ரேயனுக்கு பதில் அளித்துள்ளார்.
மக்களவை, மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு தராதது வருத்தம் அளிக்கிறது என்று அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.