ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன் – கே.எஸ்.அழகிரி

Default Image

ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன் என கே.எஸ்.அழகிரி ட்வீட். 

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி நமது ஆன்மிகத்தின் ஆதாரம் திருக்குறள் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஆளுநரின் கருத்து குறித்து கே.எஸ்.அழகிரி ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ஆளுநர் அவர்கள் ஒவ்வொரு குறளையும் படித்து அதனுடைய பொருளை புரிந்து கொள்ள முயற்ச்சித்து வருவது வரவேற்க்கத்தக்கது. ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன் என  தெரிவித்துள்ளார்.

மேலும், ஆன்மிகம் என்பது மதத்தில் இருந்து அப்பாற்பட்டது. மதம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவை, குறிப்பிட்ட இறை வழிபாட்டை, குறிப்பிட்ட கடவுளை அமைப்பு ரீதியாக பின்பற்றுவதும், அந்த நோக்கங்களுக்காக எந்த கடுமையான செயலை செய்வதற்கும் மதம் தூண்டு கோலாக அமையும். உதாரணங்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்