விஜயகாந்திடம் அரசியல் குறித்து பேசினேன்-சரத்குமார்
- தேமுதிக தலைவர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்தார்.
- சந்திப்பின் போது அரசியல் குறித்தும் பேசினேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில், தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு திரும்பினார்.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்தனர் .இந்நிலையில் இவர் தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் விஜயகாந்தை சந்தித்தார்.
இதன் பின்னர் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறுகையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன் .சந்திப்பின் போது அரசியல் குறித்தும் பேசினேன், என் கருத்தையும் கூறினேன், அவர்கள் கருத்தையும் கேட்டறிந்தேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.