அதிமுகவுக்கு ஆதரவு தந்த விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆதரவு தருகிறேன் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!

Published by
Rebekal

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கையில் அதிமுகவுக்கு ஆதரவு தந்த விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆதரவு தருகிறேன் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனரும் முன்னணி நடிகர் விஜய் அவர்களின் தந்தையும் ஆகிய எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் நேற்று விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்று கூறியிருந்தார். இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களையும், வரவேற்பையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 1.28 கோடி மதிப்பில் 19 தெருக்களில் சாலை அமைக்கக்கூடிய பணி ஆவடி மாநகராட்சியில் நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், சாலை பணிகளை மழை காரணமாக விரைந்து முடிக்க வேண்டும் என கூறினார். அதன்பின் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்ற கருத்து குறித்து பேசிய அவர், ஜெயலலிதா இருக்கும் பொழுதே நடிகர் விஜய் அதிமுகவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தவர். எனவே அவரது மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என அவரது தந்தை அறிவித்துள்ளதை தான் வரவேற்பதாகவும் பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

LSG vs MI : இறுதி வரை போராடிய மும்பை! லக்னோ ‘திரில்’ வெற்றி! 

LSG vs MI : இறுதி வரை போராடிய மும்பை! லக்னோ ‘திரில்’ வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

2 hours ago

குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…

சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…

4 hours ago

LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

4 hours ago

மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…

6 hours ago

கார் ரேஸில் பறக்கும் அஜித்.., பரபரக்கும் அட்டவணை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை…

சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…

6 hours ago

LSG vs MI : டாஸ் வென்ற மும்பை! பிளேயிங் 11-ல் ரோஹித் இருக்கிறாரா? பேட்டிங் தயாராகும் லக்னோ!

லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…

6 hours ago